போக்குவரத்துக் கழகத்தை அரசுக் கழகமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த 48,000 போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று தெலங்கான அரசு சனிக்கிழமை மாலை 6 மணி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது.
ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால், கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் சந்திரசேகர ராவ், விழாக் காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஏற்கனவே போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் மேலும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 48 ஆயிரம் ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்வதாகவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.