ஸ்மக்லிங்...
ரெகுலர் சினிமா ரசிகர்களுக்கு ஸ்மக்லிங் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலிருக்காது. இந்திய சினிமா மட்டுமல்ல உலகத்திரைப்படங்களிலும் கூட கணக்கிலடங்கா ஸ்மக்லர் சீரீஸ் திரைப்படங்கள் வெளிவந்து விட்டன.
இன்னும் வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. அந்தத் திரைப்படங்களில் காட்டப்படுவதைக் காட்டிலும் புது மாதிரியான நவீன உத்திகளை இன்றைய கடத்தல் காரர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதைப் பற்றியது தான் இந்தக் கட்டுரை.
ஸ்மக்லிங் அதாவது தங்கம், வைரம், விலையுயர்ந்த இதர உலோகங்கள், போதைப் பொருட்கள், அரிய விலை உயர்ந்த கடல்வாழ் உயிரினங்கள்,
சந்தனக் கட்டைகள், செம்மரக் கட்டைகள், யானைத் தந்தங்கள், புலி, யானை, முதலை, மான் முதலிய விலங்குகளின் தோல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு உலகம் முழுவதுமே பலத்த டிமாண்ட் உண்டு. இத்தகையக் பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு எனக் கடத்த விரும்புபவர்கள் பல்வேறு நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்