அந்தப் படத்தில் வரும் கடத்தல்காரன், வைரங்களைக் கடத்த ரஸ்க் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி இருப்பான்.
ரஸ்க் வில்லைகளில் மெல்லிய துளைகள் இட்டு அதற்குள் பொடிப்பொடியான மிகச்சிறிய விலையுயர்ந்த வைரங்களை ஒட்டி அதன் மேல் மீண்டும் ரஸ்கு தூளைப் பூசி பழையபடி ரஸ்க் பாக்கெட்டுகளில் அடைத்து அவன் கடத்தலில் ஈடுபட்டிருப்பதைப் போல காட்டியிருப்பார்கள். இது ஒரு விதமான நூதனக் கடத்தல் என்றால்;
அயன் திரைப்படத்தில் நாடு விட்டு நாடு தங்கம் மற்றும் வைரக் கடத்தலில் ஈடுபடும் சூர்யா கதாபாத்திரம், வாட்டர் பாட்டில் மேல் ஒட்டப்படும் சுய விவர, விளம்பர ஸ்டிக்கரை அகற்றி அதனுள் பொடிப்பொடியான வைரங்களை ஒட்டிக் கடத்தலில் ஈடுபடுவதைப் போலக் காட்டியிருப்பார்கள். சிலர் தலையை மழுங்க மொட்டையடித்து விட்டு விக் மாட்டிக் கொண்டு அந்த விக்குக்குள்( பொய்முடி) கடத்தல் பொருட்களை வைத்துக் கடத்துவதாக பல திரைப்படங்களில் நாம் கண்டிக்கிறோம்.
இந்த வரிசையில் பட்டிலிடத் தக்க வகையில் தற்போது துபாயில் பெண்ணொருவர் மேற்கண்ட முறைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடும்படியான புதுமையான முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.