துபாய் கஸ்டம்ஸ் தலைமை இயக்குனர்

அஹமத் மஹ்பூப் முஸாபிஹ் இதைப் பற்றிப் பேசுகையில், 'இன்றைக்கெல்லாம் கடத்தல்காரர்கள் மிக சாமர்த்தியமாக யோசிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் கடத்தலுக்கு புதுப்புது ட்ரிக்குகளைக் கையாள்கிறார்கள்.


அவர்களது ட்ரிக்குகளை முறியடித்து கடத்தலைக் கண்டுபிடிக்க சுங்கத்துறை கடுமையாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதுவரை 14 கிலோ போதைப்பொருட்களை கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றியிருக்கிறோம்.


ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியில் திகைக்கச் செய்யும் விதமாக புதுப்புது விதமாக கடத்தல்களை முறியடிக்க வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு இருந்தது.


துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பெண்ணொருவர் 3 கிலோ போதை மருந்தை 6 வால்நட் விதைகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற போது சுங்கப் பரிசோதனையில் பிடிபட்டார்.


அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை துபாய் விமானநிலைய வளாகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 973 வலிப்பு நோய் மருந்துகளில் ஒருபகுதியாகும் என துபாய் ஹலீஜ் டைம்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.