ரூ.5,600 பில்லுக்கு ரூ.1.4 லட்சம் டிப்ஸ்- சப்ளையருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

புத்தாண்டை முன்னிட்டு நிறுவனங்கள் தங்களின் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வந்தது. இந்த அறிவிப்பில் பலதரப்பு வாடிக்கையாளர்களும் பயணடைந்தனர் என்றே கூறலாம்.

பொதுவாக சர்ப்ரைஸ் என்பது அனைவரும் வரவேற்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையல்ல, இதில் ஹாலிவட் பிரபல நடிகரும் பாடகருமான டோனி வால்பெர்க் யாரென்றே தெரியாத ஒருவருக்கு புத்தாண்டு பரிசாக இன்ப அதரிச்சி கொடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை, வால்பெர்க்கின் மனைவியும், நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி தனது கணவரின் தாராள மனப்பான்மை குறித்து தனது ரசிகர்களிடம் தெரிவிக்கும் வகையில் டுவிட் ஒன்றை செய்திருந்தார். அதில், மெக்கார்த்தி வால்ல்பெர்க் ரசீது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.