" alt="" aria-hidden="true" />
இன்னல்களை மறைந்து இன்பம் தழைக்க தெலுங்கு மக்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்துக் கூறி உள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும் வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து சகோதர சகோதரிகளாய் அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கேற்று தொழில் வணிகம் கல்வி கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை மங்காது பேணிக் காக்கும் அதே வேளையில் அந்தந்தப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிணைந்து அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கேற்று மொழி வேற்றுமை பராமல் சகோதர சகோதரிகளாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.
இந்த ஒற்றுமையும் நட்புணர்வும் இப்புத்தாண்டில் மேலும் வலுப்பெறட்டும் என்றும் கொரோனா எனும் வைரஸ் நாட்டையே அச்சிறுத்தி வரும் நிலையில் இந்த இன்னல்கள் எல்லாம் மறைந்து இன்பம் தழைக்கவும் இப்புத்தாண்டு வளம் செழிக்கும் ஆண்டாகவும் நலம் தழைக்கும் ஆண்டாகவும் மலரட்டும் என்று வாழ்த்தி தெலங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய யுகாதி திருநாள் நல் வாழ்த்துகளை உரிதாக்கிக் கொள்கிறேன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்